Saturday, December 26, 2009

மணப்பெண்ணே உனக்காக

மணப்பெண்ணிற்கு பரிசளிக்க ஏற்ற நூல் இது .ஐந்தாவது பதிப்பு வெளிவந்து இருக்கிறது .வாசகர்கள் மத்தியில் எனக்கு பெயர் வாங்கித் தந்த நூல் இது .

தமிழ் பாமாலை

ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ,கனகதாரா ஸ்தோத்திரம் தமிழாக்கம் செய்யப்பட்ட நூல் இது .ஆடியோ -வீடியோ ஒலிநாடா வாங்குபவர்களுக்கு பெரிதும் உதவும் நூல் இது .

நிவேதிதா

நிவேதிதா எனது முதல் புதினம் .போலி நாகரிகத்தில் சிக்கி தனது வாழ்க்கையை இழந்த ஒரு கல்லூரி மாணவியின் கதை .


பொது அறிவு ஆயிரம்

ஆயிரம் பொது அறிவு கேள்வி -பதில்கள் அடங்கிய நூல் இது .பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் புத்தகம் இது .சில பள்ளிகளில் பரிசு நூலாக இதை வைத்திருக்கிறார்கள் .

அழகு ஆரோக்கியம் இளமை

அழகு ,ஆரோக்கியம் பற்றிய குறிப்புக்கள் அடங்கியது இந்த நூல் .இளமையை விரும்பும் அனைவரும் விரும்பி படிக்கும் நூல் இது .

கனவு காணுங்கள் .

எனது ஆறாவது சுய முன்னேற்ற நூல் இது. பிரபல மாத இதழ்களில் வெளிவந்த எனது கட்டுரைகளின் தொகுப்பு இது .

Friday, December 25, 2009

உற்சாகம் உங்கள் கையில்

நான் எழுதி வெளிவந்த பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல் .இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது .

ஆசை குழந்தைக்கு ஆயிரம் பெயர்கள்

எண்கணித முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்ட உதவும் நூல் இது .இந்த நூல் முகப்பில் இருக்கும் குழந்தைகள் எல்லோரும் எங்கள் வீட்டு குழந்தைகளே !

சிலையும் நீயே சிற்பியும் நீயே !

தினத்தந்தி குடும்ப மலரில் முப்பது வாரங்கள் தொடராக வெளிவந்த சுய முன்னேற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல் .எனக்கு நிறைய வாசகர்களை பெற்று தந்தது இந்த தொடர் .நன்றி -தினத் தந்திக்கே

நம்பிக்கை வெற்றி பெறும்.

வானதி திருவரசு பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது . பல்வேறு மாத இதழ்களில் வெளி வந்த சுய முன்னேற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல் .

பிரச்சினைகள் தீர்வுகள்


வானதி பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது .மங்கையர் மலர் ,பெண்மணி ,மங்கை ,வாசுகி மாத இதழ்களில் நான் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம் -